ஜீவன்யா அத்தியாயம்-4

“ஹலோ! நான் ஜீவானந்தன் பேசுறேன். இப்போ நீங்க ஃப்ரீ தானே? பேசலாம்ல…” என்று கேட்டு பேச்சை ஆரம்பித்து வைத்தான் ஜீவானந்தன். 

“ஐயோ! நான் வெட்டியா தான் இருக்கேன். நீங்க சாப்பிட்டீங்களா?” என்று கேட்டாள் இனியா. 

“ம்ம்… சாப்பிட்டாச்சு! நீங்க சாப்பிட்டீங்களா?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“என்ன நீங்க என்னை மரியாதையா பேசிட்டு இருக்கீங்க. நீ, வா, போ என்றே கூப்பிடுங்க. இப்போ தான் முதல்ல நீங்க கால் பண்ணீங்கல அப்போ தான் சாப்பிட்டுட்டு இருந்தேன். அதான் என்னால எடுக்க முடியல. நான் சப்பாத்தி சாப்பிட்டேன். நீங்க என்ன சாப்பிட்டீங்க? எங்க வீட்லயா? இல்ல வெளில சாப்பிட்டீங்களா?” என்று கேட்டாள் இனியா. 

“இப்போ தான சென்னைக்கு வந்தோம். வெளிலயே சாப்பிட்டாச்சு. பனீர் மசாலா தோசை சாப்பிட்டேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“உங்களுக்கு தோசை ரொம்ப பிடிக்குமா? வேற என்ன சாப்பாடு உங்களுக்கு பிடிக்கும்?” என்று கேட்டாள் இனியா. 

“ம்ம்ம்… பிடிக்கும்! குறிப்பிட்டு இது தான் பிடிக்கும், அது தான் பிடிக்கும்னு இப்போ எனக்கு சொல்ல தோணலை.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“எனக்கு கோயம்புத்தூர்ல இருக்குற அன்னபூர்ணா ஹோட்டல் தோசை ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு அம்மா பண்றதுல என்ன சாப்பாடு பிடிக்கும்?” என்று கேட்டாள் இனியா. 

“அம்மா பண்றதுல மஷ்ரூம் பிரியாணி ரொம்பப் பிடிக்கும். தோசைக்கு தக்காளி சட்னி பண்ணுவாங்க. அவ்வளவு சூப்பரா, ருசியா பண்ணுவாங்க. சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்னு தோணும்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“அப்படியா! எனக்கு சமையல் ஓரளவுக்குத் தெரியும். ஆமா நீங்க ரொம்ப உயரமா தெரியுறீங்களே? உங்க உயரம் (HEIGHT) என்ன?” என்று கேட்டாள் இனியா. 

“5‘11” என்று பதில் சொன்னான். 

“நான் 5’4, உங்க முன்னாடி நான் நின்னால் ரொம்ப குட்டையா தெரிவேன். உங்களுக்குப் பிடிச்ச கலர் என்னது?” என்று அடுத்த கேள்வியினை கேட்டாள் இனியா. 

“எனக்கு பிளாக் (BLACK), வொயிட் (WHITE) கலர் ரொம்பப் பிடிக்கும்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“எனக்கு ஆரஞ்சு கலர் ரொம்பப் பிடிக்கும். ஆனா இன்னைக்கு நீங்களும், நானும் பர்பிள் கலர் டிரஸ் போட்டு இருந்தோம். அதனால இன்னைல இருந்து பர்பிள் கலரும் எனக்கு ரொம்பப் பிடிச்ச கலரு தான். உங்க பொழுதுபோக்கு பத்தி சொல்லுங்களேன், முதல்ல என் பொழுதுபோக்கை பத்தி சொல்லிறேன். எனக்கு பாடுவது ரொம்பப் பிடிக்கும். ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் எல்லாத்திலயும் ஆக்டிவாக தான் இருப்பேன். கே டிராமா சீரிஸ் (K-DRAMA SERIES) பாக்க ரொம்பப் பிடிக்கும்.” என்று சொன்னாள் இனியா. 

“எனக்கு பார்த்து அழகா இருக்குனு தோன்ற எல்லாத்தையுமே போட்டோ எடுக்குறது தான் என்னோட பொழுதுபோக்கு. ஆமா உனக்கு எப்படி இன்ஸ்டா, ட்விட்டர் எல்லாம் தெரியும்?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“நான் மதுரைல தானங்க காலேஜ் படிப்ப படிச்சு முடிச்சேன். எனக்கு எல்லாமே தெரியும்.” என்று சொன்னாள் இனியா. 

“அப்படி சொல்ல வரீயா! உனக்கு எல்லாமே தெரியும்னா எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லனு சொல்லு.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“இல்ல எனக்குப் புரியல, எனக்கு எல்லாமே தெரியும் என்கிறதுக்கும் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல என்கிறதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு?” என்று கேட்டாள் இனியா. 

“புரியலனா விட்டுவிடு.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“இல்ல, எனக்கு நிஜமாவே புரியல. சொல்லுங்களேன்…” என்று சொன்னாள் இனியா. 

“அது வந்து… உனக்கு எல்லாமே தெரியும்னா நம்ம கல்யாணத்துக்குப் பிறகு வர முதல் ராத்திரில… எந்தப் பிரச்சனையும் எனக்கில்லைனு சொல்றேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

ஜீவானந்தன் முதல் ராத்திரி என்று சொன்னதும் இனியாவுக்கு சிறு வெட்கம் வரத்தான் செய்தது. இருந்தாலும் பேச்சு சுவாரஸ்யத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  

“அப்படி என்ன பிரச்சனை உங்களுக்கு வந்துரும்னு சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியல.” என்று கேட்டாள் இனியா. 

“நீ வயசுல சின்ன பொண்ணுனு நினைச்சிட்டு இருந்தேன். உனக்கு எல்லாமே தெரியும்னா அத பத்திப் பேசி, புரிய வெச்சி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்னு சொல்றேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

‘இதுல சின்ன பொண்ணு, பெரிய பொண்ணுனு என்ன இருக்கு? முதல் ராத்திரில எத பத்திப் பேசிப் புரிய வெக்க போறாரு?’ என்று யோசித்தவளுக்கு இரண்டு நிமிடங்களுக்குப் பிறகே விடை கிடைத்தது.  

‘அதைப் பத்தியா இவ்ளோ நேரமா பேசிட்டு இருந்தீங்க? உங்கள போய் நான் சமத்துப் பையன்னு நினைச்சிட்டேன் பாருங்க…’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டு வெட்கப்பட்டும் கொண்டாள். 

“ஐயோ அத்து! இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா அப்படியே போனை வெச்சிட்டு போயிருவேன்.” என்று சொன்னாள் இனியா. 

“போனை எங்க வெச்சிட்டு போவ? அப்படியே வெச்சிட்டு போனா கீழ விழுந்துருமே… ஆமா இப்போ என்னை என்ன சொல்லி கூப்பிட்ட?” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“என்னங்க நீங்க இப்படி மொக்க போடுறீங்க…” என்று சொன்னவள் சற்றுத் தயங்கிக் கொண்டே, “அதுவா! அத்துனு சொல்லிக் கூப்பிட்டேன்.” என்று சொன்னாள் இனியா. 

“நீ அத்துனு சொன்னது எனக்குக் கேட்டது. அத்துனா என்ன அர்த்தம்னு கேக்குறேன்?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“மாமனார் காலிங் மாமு! சோ அத்தான் காலிங் அத்து!” என்று சொன்னாள் இனியா. 

“இதுவரை இப்படி யார்கிட்டயும் பேசுனது இல்ல தெரியுமா? என்னனு தெரில உன்கிட்ட மட்டும் தான் இப்படிப் பேசத் தோணுது.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

ஜீவானந்தன் சொன்னதைக் கேட்டதும் மனதுக்கு ரொம்பவே சந்தோஷத்தை கொடுத்தது. இருந்தும் அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல் வேறு ஏதோ விஷயங்ககளைப் பற்றி பேச்சுக் கொடுத்தாள். 

“ஆமா நீங்க போட்டோ எடுக்குறது தான் உங்க பொழுதுபோக்கு சொன்னீங்களே! இன்னைக்கு காலைல என்னை பாக்க வந்தீங்களே அப்போ என்னை ஏதாவது போட்டோ எடுத்து வெச்சிருக்கீங்களா?” என்று கேட்டாள் இனியா. 

“பாத்து அழகா இருக்குனு தோன்றத மட்டும் தான் போட்டோ எடுப்பேன்னு சொன்னேனே!” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“அப்போ நான் அழகா இல்லனு சொல்றீங்களா?” என்று கேட்டாள் இனியா. 

“நீ அங்க இருந்தா நான் எப்படி அதை என் உதட்டால சொல்ல முடியும்?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“நான் இங்க உசிலம்பட்டில இருக்குறதுக்கும் சென்னைல இருக்கிற நீங்க சொல்லாததுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு? ஆமா எல்லாரும் வாயால சொல்றேன்னு தான சொல்லுவாங்க, நீங்க என்ன உதடுனு சொல்றீங்க. எனக்கு ஒன்னும் புரியல.” என்றாள் இனியா. 

“நீ இங்க வந்து என்கூட இருப்பல, அப்போ சொல்றேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“தெரிஞ்சிக்கலனா எனக்கு தலையே வெடிச்சிருமே!” என்று சொன்னாள் இனியா. 

“அப்புறம் தெரிஞ்சிக்கலாம், இப்போ தூங்கப் போ. நான் இப்போ தூங்கணும் நாளைக்கு எனக்கு வேலை இருக்கு.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“அப்போ சரிங்க நீங்க தூங்கப் போங்க, குட் நைட்!” என்று சொன்னாள் இனியா. 

“குட் நைட்!” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டான் ஜீவானந்தன். 

அழைப்பைத் துண்டித்தவன் கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கடந்திருந்தது. அவன் இதுவரை எந்தப் பெண்ணிடமும் மணிக்கணக்காக பேசியதே இல்லை. 

ஜீவானந்தன் இனியாவிடம் பேசியது தன்னையே புதிதாக உணரச் செய்தது. புரியாத உணர்வாக இருந்தது. மனது முழுக்க சந்தோஷத்தையும், மன நிறைவையும் கொடுத்தது. அதே சந்தோஷத்துடன் படுக்கையிலும் விழுந்தான். 

பயணம் செய்த உடல் அலுப்பிலும், களைப்பிலும் படுத்ததும் உறங்கியும் விட்டான். 

கிட்டத்தட்ட அதே நிலையில் தான் இனியாவும் இருந்தாள். சந்தோஷத்தில் இருந்தாள். காதல் பாடல்களைக் கேட்டுக் கொண்டே அப்படியே ஆடி பாட வேண்டும் என்பது போலத் தோன்றியது. பாடல்களைக் கேட்டுக் கொண்டு ஆடுவது தூங்கிக் கொண்டிருக்கும் தன் அன்னைக்கு தொல்லையாக இருக்கக் கூடாது என்று எண்ணி இயர்செட் (EARSET) உபயோகித்துக் கொண்டாள். 

அவள் கேட்ட அனைத்துப் பாடல்களுமே காதலை சொட்டச் சொட்ட பிழிகிற பாடல்களாகவே அமைந்தது. அதிகாலையில் நான்கு மணிக்கு தான் உறக்கம் வந்து உறங்கினாள். 

உதவி இயக்குனராக பணியாற்றப் போகும் முதல் படத்தின் படப்பிடிப்பு அன்று காலை ஏழு மணிக்கு நடைபெற ஆரம்பிக்கும். ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாகவே அந்தப் படப்பிடிப்பு நடக்கப் போகிற இடத்திற்குச் சென்று எல்லாவற்றையும் ஆயத்தம் செய்ய வேண்டும். காலை நாலரை மணிக்கே எழுந்தவன் குளித்து உடை மாற்றிவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் கிளம்பியவன், அந்த இடத்தை ஐந்து இருபத்தி ஐந்து மணிக்கே அடைந்து விட்டான். இரவு எட்டு மணி வரை படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வரவே மணி ஒன்பது ஆனது.  

வீட்டிற்கு வந்து குளித்து உடை மாற்றிக் கொண்டு சாப்பிட்டவன், இரவு பத்து மணிக்கே உறங்கியும் விட்டான். இனியாவுக்கு கைப்பேசியில் அழைத்துப் பேசவும் இல்லை. தான் வேலையில் மட்டும் எந்நேரமும் சுழன்று கொண்டிருப்பதைத் தெரிவிக்காமல் விட்டுவிட்டான். அன்று முழுவதுமே ஜீவானந்தன் தன்னை அழைத்துப் பேசுவான் என்று நினைத்துக் கொண்டு கைப்பேசியை கையிலே வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். 

ஒவ்வொரு பெண்ணுக்குமே தன்னவன் தன்னையே சுற்றி சுற்றி வர வேண்டும், கிட்டத்தட்ட பித்தன் போலத் தன்னை நாடியே இருக்க வேண்டும் என்கிற ஆசை, விருப்பம் இருக்கத்தான் செய்யும். அதில் இனியா மட்டும் விதிவிலக்கா என்ன? 

காலையிலாவது அலுவலக வேலை இருக்கும் தன்னவனால் அழைத்துப் பேச முடியாது என்பதை ஒத்துக் கொண்டாள். இரவிலாவது வேலையை முடித்துக் கொண்டு கைப்பேசியில் அழைத்துப் பேசுவான் என்கிற முழு நம்பிக்கையுடன் காத்திருந்தாள். ஆனால் நேரம் தான் சென்று கொண்டிருந்ததே தவிர அவன் அழைக்கவே இல்லை. 

தானாவது அழைத்துப் பேசலாம் என்று நினைத்து மணியைப் பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள். இரவு பதினொன்று ஆக சுமார் ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்தது. 

ஜீவானந்தன் தூங்கிவிட்டிருந்தால் அழைத்துப் பேசி தொல்லை செய்து தூக்கத்தை கெடுக்க விரும்பவில்லை. எனவே அந்த முயற்சியையும் கைவிட்டுவிட்டாள். 

ஏமாற்றம், கோபம், வலி என அனைத்தும் சேர்ந்து கண்ணீரை வரவழைத்தது. நேற்றைக்கு எவ்வளவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தாளோ அதே அளவு சோகத்தில் தவித்தாள். தூக்கமும் வரவில்லை. இயர்செட் எடுத்து காதில் மாட்டிக் கொண்டு படுக்கையில் படுத்து தூங்க முயற்சித்தாள். அவள் கேட்ட அனைத்துப் பாடல்களுமே காதலைச் சொல்லும் சோகப் பாடல்களாவே இருந்தது. பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தவள் அப்படியே ஆஃப் செய்துவிட்டு உறங்கியும் விட்டாள். 

மறுநாள்… 

மறுநாள் காலையில் லேட்டாக தான் எழுந்து அமர்ந்தாள். தானே அழைத்துப் பேசலாமா? வேண்டாமா? என்கிற மனக் குழப்பத்திலே இருந்தாள். குளித்து விட்டு வரலாம் என்று முடிவு செய்தவள் குளிக்கவும் சென்று விட்டாள். 

சென்னையிலும் ஜீவானந்தன் லேட்டாக தான் எழுந்தான். குளித்து உடை மாற்றி விட்டு சாப்பிட்டவன், சிறிது நேரம் ஒய்வு எடுக்க வரவேற்பு அறையில் உள்ள சாய்வு நாற்காலியில் அமர்ந்தான். அப்பொழுது இனியாவின் ஞாபகம் வரவே அவளைக் கைப்பேசியில் அழைத்தான். 

அப்பொழுது தான் இனியா குளிக்கச் சென்றிருந்தாள். எனவே அவளால் அழைப்பை ஏற்க முடியாமல் போய் விட்டது. அவள் ஏதாவது வேலையில் இருப்பாள் தொல்லை செய்ய வேண்டாம் என்று நினைத்த ஜீவானந்தனும் திரும்ப அழைத்துப் பேச முயற்சி செய்யவில்லை. 

குளித்து உடை மாற்றிவிட்டு படுக்கை அறைக்குள் வந்தவள் தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தால் ஜீவானந்தனின் நினைப்பு தான் வரும் என்று நினைத்தவள், தன் கைப்பேசியைக் கையில் எடுத்து பார்க்காமல் நேராக சமையல் அறைக்குச் சென்றாள். 

அவளைப் பார்த்ததும் தாய் திவ்யா தோசைக் கல்லை அடுப்பில் வைத்துச் சுடச் சுட மொறு மொறுவென நான்கு தோசைகளைச் சுட்டு தட்டில் வைத்து, தக்காளி சட்னியுடன் கொடுத்தார். தோசையைத் தக்காளி சட்னியுடன் பார்த்ததும் ஜீவானந்தன் தான் நினைவில் வந்தான். 

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-20

அத்தியாயம்-20 இறுதி அத்தியாயம்

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-19

அத்தியாயம்-19

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-18

அத்தியாயம்-18

Read More
error: Content is protected !!