படக்குழுவினர் படத்தின் வெளியீடுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்த ஞாயிற்றுக்கிழமையில் இசை வெளியீடு நிகழ்ச்சியை நடத்தி அன்றே படத்தின் ட்ரைலரையும் வெளியிட்டு இருந்தனர்.
படத்தின் வெளியீடுக்கு பத்து நாட்கள் தான் இருந்தது.
இனியாவுக்கு ஜீவானந்தனிடம் இருந்து கைப்பேசியில் அழைப்பு ஒன்று வந்தது.
அவளும் அழைப்பை ஏற்று காதில் வைத்து, “ஹலோ” சொன்னாள்.
“நான் இப்போ வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன். நீ வெளில கிளம்புற மாதிரி தயாராக இரு. நான் வந்து உன்னை கூட்டிட்டு போறேன்.” என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான் ஜீவானந்தன்.
ஜீவானந்தன் தன்னை கைப்பேசியில் அழைத்து தன்னை வெளியில் எங்கோ அழைத்துச் செல்வதாக கூறுவான் என்பதை இனியா எதிர்பார்க்கவே இல்லை.
ஜீவானந்தன் தன்னை உணவகத்துக்கு அல்லது கடைக்கு அழைத்து செல்வான் என்று இனியா நினைத்துக் கொண்டாள்.
ஜீவானந்தன் தன்னை வெளியில் எங்கோ அழைத்து செல்ல போகிறான் போல என்று நினைத்துக் கொண்டவள் சந்தோஷமாக கிளம்பி ஆயத்தமானாள்.
‘என்னை இத்தனை நாளாக பார்க்க முடியல, பிரிந்து இருக்க கஷ்டமா இருக்குனு என்னை தேடி வாராங்க போல. என்னை எங்கயோ வெளில கூட்டிட்டு போக போறாங்க.’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் இனியா.
அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்தான் ஜீவானந்தன்.
ஜீவானந்தன் இனியாவை தனது நான்கு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பயணம் செய்தான்.
‘எங்கே செல்ல போகிறோம்?’ என்ற கேள்வியை இனியாவும் கேட்கவில்லை. ‘எங்கே செல்ல போகிறோம்.’ என்ற கேள்விக்கான பதிலை ஜீவானந்தனும் சொல்லவில்லை.
அரை மணி நேரம் பயணம் செய்து வாகனத்தை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு அவளை இறங்க சொன்னான் ஜீவானந்தன். இனியாவும் அவனின் பேச்சை கேட்டு வாகனத்தில் இருந்து கீழே இறங்கினாள்.
ஜீவானந்தனும் வாகனத்தில் இருந்து கீழே இறங்கினான்.
ஜீவானந்தன் இனியாவை கட்டிடத்தின் உள்ளே அழைத்துச் சென்றான்.
ஜீவானந்தன் தன்னை அழைத்துச் சென்ற இடத்தை பார்த்ததும் அதிர்ந்து தான் போனாள். அவன் அழைத்துச் சென்ற இடம் மியூசிக் ஸ்டுடியோ தான்.
“இங்க நாம எதுக்கு வந்து இருக்கிறோம்?” என்று கேட்டாள் இனியா.
“மியூசிக் டைரக்டர் அவசரமா படத்துல சேர்க்க ஒரு பொண்ணோட குரலில் பாடல் ஒன்னு வேணும்னு சொல்லி இருந்தார். யாராவது தெரியுமானு கேட்டு இருந்தார். எனக்கு உன் ஞாபகம் தான் வந்துச்சு. எனக்காக இந்த பாடலை பாடி தர முடியுமா?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
ஜீவானந்தன் இப்படி ஒரு கேள்வியினை தன்னிடம் கேட்பான் என்பதை இனியா எதிர்பார்த்திருக்கவே இல்லை.
இவ்வளவு எளிதாக படத்தில் பாட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை எல்லாம் அவள் நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை.
ஜீவானந்தன் இயக்கும் முதல் படத்தின் இசையமைப்பாளர் திரைப்படத் துறையில் பிரபலமானவர் தான். அவரது இசையில் பாடல் ஒன்றை பாட தனக்கு வாய்ப்பை வாங்கி கொடுத்த கணவனுக்கு தான் நியாயத்தை செய்ய வேண்டும் என்பதை மனதினில் முடிவு செய்து கொண்டாள் இனியா.
“ரொம்ப தூரம் டிராவல் பண்ணிட்டு வந்ததால் ரொம்ப சோர்வாக தெரியுற. நான் உனக்கு ஜூஸ் ஆர்டர் பண்ணி வாங்கி தாரேன். ரொம்ப டென்ஷன் ஆக வேண்டாம். சின்ன பாடல் போர்சன் தான். ரெண்டு அல்லது மூன்று நிமிஷ பாடல் தான். காதலின் வலியை பத்தி சொல்ற பாடலா இருக்கும். நீ ஃபீல் பண்ணி பாடினால் பாடலை கேட்கவே ரொம்ப நல்லா இருக்கும். முயற்சி பண்ணி பாரு.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“எனக்கு எந்த முன் அனுபவமும் இல்லையேங்க. என்னால அவங்க எதிர்பார்க்கிற மாதிரி பாட முடியுமானு தெரியலயே.” என்று சொன்னாள் இனியா.
“நீ மூணு வருஷத்துக்கு மேல சிங்கிங் கத்துக்கிட்டு இருக்க. இந்த வாய்ப்பை நீ நல்ல முறைல பயன்படுத்திக்கிட்டா உனக்கு சிங்கிங்ல நல்ல எதிர்காலம் இருக்கும். மியூசிக் டைரக்டர் ரொம்ப நல்ல டைப் தான். அவரு ரொம்ப பொறுமையா உனக்கு ஹெல்ப் பண்ணுவார். அவரு கிட்ட இருந்து நீ நிறைய கத்துக்கலாம். நீ பாடும் போது நான் உன் கூட தான் இருப்பேன். இந்த பாடல் இந்த படத்துல எப்போ வரும்னு நான் உனக்கு விளக்கி சொல்றேன். அப்போ தான் உன்னால இன்னும் நல்லா பாட முடியும்.
ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரும் பிரிஞ்சு வேறு வேறு இடத்துல இருக்காங்க. சிறு இடைவெளினு கூட சொல்லலாம். ஹீரோயின் ஹீரோவை ரொம்ப மிஸ் பண்றாங்க. ஹீரோயினுக்கு எந்த பொருள பார்த்தாலும் ஹீரோவோட ஞாபகம் தான் வருது. ஹீரோ ஏதாவது செஞ்சி அது அவங்கள எவ்ளோ தான் ஹர்ட் பண்ணினாலும் அத ஹீரோ கிட்ட வெளிப்படுத்திக்காம ஹீரோவோட சந்தோஷம் தான் தனக்கு முக்கியம், ஹீரோவோட மனச கஷ்டப்படுத்த கூடாதுனு ஹீரோயின் நினைக்கிறாங்க. ஹீரோ என்ன செஞ்சாலும் ஹீரோவை ஹீரோயினால வெறுக்க முடியல.
இந்த நிலைமையை புரிஞ்சிக்கிட்டு ரொம்ப அழகா பாடலோட வரிகளை எல்லாருக்கும் புரியுற மாதிரி எழுதி கொடுத்துருக்கார் லிரிக்ஸ் ரைட்டர். நீ ஜூஸ் குடிச்சதும் நான் உனக்கு லிரிக்ஸ் காட்டுறேன். அத படிச்சு பார்த்து நல்லா மனசுல பதிய வெச்சுக்கோ. நல்லா ஃபீல் பண்ணி பாடலாக பாடு. அப்படியே கேக்குறவங்கல அழ வெக்கணும். நீ மட்டும் அப்படி பண்ணிட்டா நிச்சயமா எல்லா பெண்களோட பிளேலிஸ்ட்ளையும் இந்த பாடல் நிச்சயமா இடம் பிடிக்கும்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
ஜீவானந்தன் தன் படத்தின் கதாநாயகி, கதாநாயகன் மேல் கொண்டிருந்த காதலை பற்றி விவரித்து கொண்டிருக்கும் பொழுது, அவனின் நினைவு முழுவதும் அந்த படத்தில் தான் இருந்தது.
தன் படத்தின் கதாநாயகி, கதாநாயகன் மேல் கொண்டிருந்த காதலை போல தான், தன் நாயகியும் தன் மேல் உயிர் காதலை கொண்டுள்ளாள் என்பதை ஏனோ அந்த நேரத்தில் யோசிக்க தவறி இருந்தான் ஜீவானந்தன்.
ஜீவானந்தன் இனியாவுக்கு பழக்கடையில் இருந்து ஜூஸ் ஒன்றை ஆர்டர் பண்ணி வாங்கி கொடுத்தான்.
இனியா ஜூஸ் குடித்து முடித்து ரிலாக்ஸ் ஆனதும் அவளுக்கு பாடலின் வரிகளை காட்டினான்.
பாடலின் வரிகளை படித்து பார்த்தாள் இனியா. பாடலின் வரிகளை எழுதியவர் அருமையாக எழுதி இருப்பதாக இனியாவுக்கு தோன்றியது.
சிறிது நேரத்தை எடுத்துக் கொண்டு பாடலின் வரிகளை மனப்பாடம் செய்து கொண்டாள் இனியா.
ஜீவானந்தன் இனியாவை ஸ்டுடியோவுக்குள் அழைத்துச் சென்றான். அங்கு அந்த படத்தின் இசையமைப்பாளர் இருந்தார். ஜீவானந்தன் சொன்னது போல அந்த இசையமைப்பாளர் அவளிடம் நல்ல முறையில் தான் பழகினார். பாடலை எப்படி பாட வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தார்.
இனியா அந்த பாடலை பாடி காட்டினாள். இசையமைப்பாளர் இனியாவை அந்தந்த இடத்தில் எப்படி பாட வேண்டும் என்பதை சொல்லி திருத்தினார்.
கடைசியாக மொத்த பாடலையும் பாட சொன்னார்.
இனியாவும் மொத்த பாடலையும் ஜீவானந்தனை நினைத்துக் கொண்டே பாடி முடித்தாள்.
அந்த பாடலை பாடிய பொழுது இனியாவின் நினைவு முழுவதிலும் அவனே ஆக்கிரமித்து இருந்தான்.
இசையமைப்பாளர் இனியா பாடிய பாடலை பதிவு செய்து கொண்டார்.
ஜீவானந்தன் இனியாவை வீட்டில் விட்டுவிட்டு தான் சென்றான்.
இனியா படுக்கையறை கட்டிலில் படுத்துக் கொண்டு ஜீவானந்தனை பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.
‘அவரு வெளில கூட்டிட்டு போறேன்னு சொன்னதும் ஒன்னு கடைக்கு கூட்டிட்டு போவார் அல்லது ஏதாவது ஹோட்டலுக்கு கூட்டிட்டு போவார்னு நினைச்சிட்டேன். என்னை இத்தனை நாளாக பாக்க முடியல, பிரிஞ்சி இருக்க கஷ்டமா இருக்குனு என்னை பார்க்க வராருனு நினைச்சிட்டேன். என் கூட டைம் ஸ்பென்ட் பண்ண நினைக்கிறார்னு நினைச்சிட்டேன். ஆனா அப்படி இல்லன்னு ஆகும் போது சிறிது ஏமாற்றமாக தான் இருந்தது. மனசுக்கு ரொம்ப கஷ்டமா தான் இருந்தது. ஆனா இவரு இப்படி ஒரு சான்ஸ் வாங்கி கொடுப்பாருனு நான் எதிர்பார்க்கவே இல்ல.’ என்று மனதினில் நினைத்துக் கொண்டாள் இனியா.
மறுநாள் இரவில் ஜீவானந்தன் இனியாவை கைப்பேசியில் அழைத்து பேசினான்.
“நீ பாடிய பாடலை மியூசிக் டைரக்டர் ஓகே பண்ணிட்டார். அவரு ரெடி பண்ணினத இன்னைக்கு தான் கேட்டேன். செம சுப்பராக பாடி இருக்க. நீ பாடிய பாடலை நாளைக்கே நாங்க ரிலீஸ் பண்ண போறோம். கேட்டுட்டு எப்படி இருக்குனு சொல்லு. நீ இன்னைக்கு டாக்டர் கிட்ட போனல. டாக்டர் என்ன சொன்னாங்க? மாத்திரை, மருந்தெல்லாம் கரெக்டா எடுத்துக்குறீயா?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“டாக்டர் ஒன்னும் சொல்லல. நான் நல்லா இருக்கேன். எந்த பிரச்சனையும் இல்லங்க. அதெல்லாம் எடுத்துக்குறேன்.” என்று சொன்னாள் இனியா.
மறுநாள் இரவு ஏழு மணிக்கு படக்குழுவினர் இனியா பாடிய பாடலை சமுக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இனியா பாடியிருந்த பாடல் பலரது பாராட்டுதல்களையும் பெற்றது.
ஜீவானந்தன் இயக்கி இருக்கிற படத்தில் வரும் ஒரு பாடலை இனியா பாடியிருப்பது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தெரிய வந்தது.
ஜீவானந்தன் திரைத்துறையில் இருப்பதையே அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனியாவை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? ஆனாலும் நிறைமாதத்தில் இருக்கும் இனியாவிடம் பேசி அவளை படுத்தி எடுக்க வேண்டாம் என்று அனைவராலும் சேர்ந்து முடிவு செய்யப்பட்டது.
ஆதவன் வெண்ணிலாவிடமும், திவ்யாவிடமும், “அவ இப்போ ஒன்பதாவது மாசத்துல இருக்கா. இப்போ அவனோட படத்துல அவ பாடுனத பத்தி எதுவும் கேக்க வேண்டாம். குழந்த பிறந்த பிறகு அவனும் இருக்கும் போது அவ கிட்ட பேசி பார்க்கலாம்.” என்று சொன்னார்.
வெளியிட்ட வீடியோவுக்கு கீழே நிறைய பேர் பாராட்டுதலை தெரிவித்து இருந்தனர். அதையெல்லாம் படித்து பார்த்த இனியாவுக்கு சந்தோஷத்தில் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.
இனியா ஜீவானந்தனுக்கு கைப்பேசியில் அழைத்தாள்.
ஜீவானந்தன் அழைப்பை ஏற்று காதில் வைத்து, “ஹலோ” சொன்னதும், “ரொம்ப தேங்க்ஸ்ங்க… என் மேல நம்பிக்கை வெச்சி எனக்கு இந்த பாடலை பாட வாய்ப்பை வாங்கி கொடுத்ததுக்கு. இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. வோக்கல்ஸ் (VOCALS) இனியா ஜீவானந்தன்னு சாங் வீடியோவுல வரத பார்த்ததும் சந்தோஷத்துல கண்ணீரே வந்துருச்சு தெரியுமா!” என்று சொன்னாள் இனியா.
“இனியாம்மா, எனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நன்றிலாம் சொல்லிட்டு இருக்க. நீ எனக்கு எவ்ளோ சப்போர்ட் பண்ணி என்னை இந்த நிலைமைக்கு நிற்க வெச்சி இருக்க. நான் உனக்கு இத கூட பண்ண மாட்டேனா. உன் சிங்கிங் கேரீர்ல நல்ல தொடக்கம் அமைஞ்சிருச்சு. அடுத்தடுத்து வர போகிற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திகிட்டா உனக்கு சிங்கிங்ல நல்ல எதிர்காலம் இருக்கும். நான் உனக்கு அதுல ஹெல்ப் பண்றேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
சிறிது நேரம் பேசி விட்டு கைப்பேசி அழைப்பை துண்டித்து விட்டனர்.
ஜீவானந்தன் இயக்கிய முதல் படத்துக்கு சென்சார் போர்ட் ‘U’ சர்ட்டிபிக்கேட் தான் கொடுத்திருந்தது.
ஒரு வாரம் கடந்து சென்றது.
அன்று தான் ஜீவானந்தன் இயக்கிய முதல் படத்தை திரையரங்குகளில் திரையிட போகிறார்கள்.
காலை ஏழு மணிக்கு தான் திரையரங்குகளில் திரையிட ஆரம்பித்தனர்.
ஜீவானந்தன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் பிரபலமான திரையரங்கு ஒன்றில் தான் அமர்ந்து இருந்தனர்.
படம் திரையிடப்பட்டு இரண்டு மணி நேரம் கழித்து தான் இனியா பாடிய அந்த பாடல் திரையில் திரையிடப்பட்டது.
அந்த பாடல் திரையிடப்பட்ட போது ஜீவானந்தன் இனியாவை பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தான்.
“உங்க படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகும் போது நான் தான் முதல் ஆளாக உங்களுக்காக FDFS பார்க்க வந்து நிற்பேன்.” என்று இனியா சொன்னது தான் அந்த நேரத்தில் அவனுக்கு ஞாபகம் வந்தது.
இனியா ஒன்பதாவது மாதத்தில் இருந்ததால் அவளை திரையரங்குகளில் படத்தை பார்க்க யாரும் அனுமதி கொடுக்கவில்லை.
இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் ஓடிய அந்த திரைபடத்தில் பலராலும் எதிர்பார்க்கப்படாத விஷயங்களும் இருந்தது. அதில் ஒன்று ஜீவானந்தன் அந்த படத்தில் நடித்திருப்பது. ஜீவானந்தன் தான் அந்த படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தான். அவனுக்கு ஜோடியாக தான் அஞ்சலி நடித்திருந்தாள்.
படத்தை திரையிடப்பட்ட காட்சிகள் முடிவடைந்ததும் படத்தை பார்க்க வந்த மக்கள் அனைவரும் வெளியேறினர். அனைவரின் முகத்திலும் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியே அதில் தெரிந்தது.
அந்த படம் குடும்பத்துடன் பார்க்க கூடிய வகையில் காதல் படமாக தான் அனைவராலும் பார்க்கப்பட்டு பாராட்டுதலையும் பெற்றது.
எல்லாராலும் புரிந்து கொண்டு பார்க்க கூடிய படமாக தான் திரைப்படத்தை எடுத்திருந்தான் ஜீவானந்தன்.
பலர் நேரடியாகவே ஜீவானந்தனிடம் வந்து பாராட்டுதலை தெரிவித்து விட்டு சென்றனர்.
அந்த படம் மக்களிடம் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் மற்றும் நல்ல விமர்சனங்களையும் பெற்றது.
நாயகன் அஸ்வத் மற்றும் தயாரிப்பாளர் சந்திரன் ஜீவானந்தனை கட்டிப்பிடித்து தங்களின் மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.
அவனுடன் உறுதுணையாக இருந்து இந்த நிலைமைக்கு வந்து நிறுத்தி இருப்பவள் அவனது மனைவி அல்லவா.
இனியாவை சந்தித்து அவளை அணைத்துக் கொண்டு தன்னுடைய சந்தோஷத்தினை அவளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து திரையரங்கில் இருந்து வெளியேறி அவளை சந்திக்க வீட்டிற்கு கிளம்பினான் ஜீவானந்தன்.